வேகக்கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து – மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு

குருணாகல் நாரம்மல – பெதிகமுவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

நாரம்மல பகுதியில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மதிலில் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த இருவர் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மற்றைய பெண் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நாரம்மல – பெதிகமுவ பகுதியைச் சேர்ந்த 56, 59 மற்றும் 61 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்