நூற்றுக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் மூடப்பட்டன -முட்டை, இறைச்சிக்கு பெரும் தட்டுப்பாடு

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பல்வேறு பொருட்களுக்கும் தட்டுப்பாடு அல்லது பாரியளவிலான விலை உயர்வு காரணமாக பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

தற்போதும் கூட அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறதே ஒழிய ஏனைய பொருட்களின் விலைகள் உச்ச அளவிலேயே உள்ளன.

அந்த வகையில் கோழிகளுக்கான தீவன தட்டுப்பாடு காரணமாக தமது வாழ்வாதாரத்திறகாக கோழிகளை வளர்ப்போர் உட்பட பெரும் பண்ணைகளை நடத்தி வருவோர் கூட பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

இவ்வாறு கோழிகளுக்கான தீவன தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் இதுவரை 140 கோழிப்பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் மூடப்பட்டன -முட்டை, இறைச்சிக்கு பெரும் தட்டுப்பாடு | More Than A Hundred Poultry Farms Were Closed

கோழி தீவன தட்டுப்பாடு காரணமாக தாய் விலங்குகள் கூட பல மாதங்களாக விற்பனை செய்யப்படுவதாக விவசாய அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கோழிப்பண்ணைகள் மூடப்பட்டதால் நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான விலைகள் வெகுவாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண துரித திட்டங்கள் வகுத்து, கால்நடை அபிவிருத்திக்காக இந்த வருட வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பயன்படுத்த வேண்டும் அல்லது மூடப்பட்ட கோழிப்பண்ணைகளை மீண்டும் திறக்க வேண்டும் என கால்நடை துறை அதிகாரிகளிடம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.