பண்டிகை காலங்களில் மின்வெட்டுத் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மின்வெட்டு இடம்பெறாது என சிறிலங்கா மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய டிசம்பர் 24, 25, 26 மற்றும் ஜனவரி 1, 2 ஆகிய திகதிகளில் மின்வெட்டு இருக்காது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஜனவரி முதலாம் திகதி முதல் நாளொன்றுக்கு 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் நேற்றைய தினம் தெரிவித்திருந்தது.

 

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு, போதிய நிலக்கரி இன்மையாலேயே இவ்வாறான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்திருந்தது.

அனல் மின்நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையினாலும், மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான நீர்த்தேக்கங்களில் நீர் கொள்ளளவு குறைந்ததாலும், நீர்மின் நிலைய பகுதிகளில் மழையின்மையினாலும், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.