தீவகத்தில் முதன்முறையாக டாம் சுற்றுப்போட்டி ..

புங்குடுதீவு பாரதி விளையாட்டுக்கழகத்தினால் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட டாம் சுற்றுப் போட்டித்தொடரில் 48 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். கடந்த பல தசாப்த காலப்பகுதியில் தீவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது டாம் விளையாட்டு சுற்றுப்போட்டித்தொடர் இதுவாகும் .

இப்போட்டித்தொடரின் இறுதிப்போட்டி 19.12.2022 அன்று மாலை மூன்று மணிக்கு புங்குடுதீவு பாரதி சனசமூக நிலையத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு விருந்தினர்களாக புங்குடுதீவு உலக மையம் அமைப்பின் செயலாளர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களும் ஆசிரியர் அசோக் அவர்களும் வருகைதந்து சிறப்பித்திருந்ததோடு வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் பணப்பரிசில்களையும் வழங்கிவைத்தனர்.

இப்போட்டியில் முதலிடத்தை
யாழ் மருதனார்மடத்தினை சேர்ந்த
துரையன் றஜிகாந்தன்(குட்டி) அவர்களும் , இரண்டாமிடத்தை மருதனார்மடம்
சுந்தரலிங்கம் சுஜீந்தன் (ஜிந்தா) அவர்களும் மூன்றாமிடத்தினை புங்குடுதீவு
தர்மலிங்கம் சஞ்ஜீவ் அவர்களும் தட்டிச்சென்றிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.