சாவகச்சேரியில் பட்டபகலில் கொள்ளை – பத்துலட்சத்திற்கு மேற்பட்டபணம் மற்றும் நகைகள் கொள்ளை

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்மட்டுவில் பகுதியில் பட்டப்பகலில் வீடொன்றில் இருந்து நகைகள் மற்றும் பணம் திருடர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இன்று (21) காலை வேளையில் வீட்டில் இருந்தவர்கள் வேலை நிமித்தம் வெளியில் சென்ற வேளையிலேயே இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்காரர்களில் ஒருவர் காலை 11.00 மணியளவில் வீட்டுக்கு வந்தபோதே திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

வீட்டின் கதவை உடைத்தே திருடர்கள் கொள்ளையடித்துள்ளனர்.5 லட்சம் ரூபா பணம் மற்றும் 5 லட்சம் பெறுமதிக்கு மேற்பட்ட நகைகள் என்பனவே திருடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவக்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்