மைனா எனும் செல்லப்பெயரில் அழைக்கப்படும் மகிந்த! வெளியான காரணம்

அரசியல் வட்டாரங்களில் மைனா எனும் செல்லப்பெயரில் மகிந்த ராஜபக்ச அழைக்கப்படுவதற்கான காரணத்தை அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன வெளியிட்டுள்ளார்.

தற்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சிலர் மைனா’ அல்லது ‘நாகி மைனா’ என அழைப்பதாகவும், அவருக்கு வயதாகியமையினால் இவ்வாறு அழைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மைனா எனும் செல்லப்பெயரில் அழைக்கப்படும் மகிந்த! வெளியான காரணம் | Srilanka Political Crisis Mahindha

இருப்பினும், மகிந்த ராஜபக்சவிற்கு வயதாகி இருந்தாலும், அவரின் தலைமைக்கு வெளியே எவருக்கும் வாக்களிக்க மாட்டோம் என  அனுராதபுரம் பகுதியினை சேர்ந்த மொட்டுக்கட்சி உறுப்பினர்கள் கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளையும் விட மொட்டு பாரியளவில் வெற்றிபெறும் எனவும் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்