நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் விடுதிகள் மற்றும் விருந்தகங்களில் மதுபானம் பரிமாறுவதற்கு தடை இல்லை எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்