IMF நிதி உதவி கிடைப்பது ஜனவரிக்கு மேலும் தாமதமாகலாம்- இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைப்பது ஜனவரிக்கு அப்பாலும் தாமதமாகலாம் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்கியவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் குழப்பமான நிலை காரணமாக சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 2.9 பில்லியன் கிடைப்பது ஜனவரிக்கு அப்பாலும் தாமதமாகலாம் என இராஜாங்க அமைச்சர் எக்கனமி நெக்ஸ்டிற்கு தெரிவித்துள்ளார்.

2022 முடிவடைவதற்கு முன்னர் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைக்கலாம் என இலங்கை அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர் அதன் பின்னர் ஜனவரியில் கிடைக்கலாம் என தெரிவித்திருந்தனர்.

இலங்கை சர்வதேச சந்தையில் டொலர் கொள்வனவில் ஈடுபடுவதற்கு அதற்கு சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைக்கும் காலம் அவசியமானது.

அடுத்த வருடத்தின் முதல் காலாண்டிற்கு முன்னர் இந்த நிதியுதவியை பெறுவதற்காக எங்களால் முடிந்தளவு முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம் என இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்

அரசாங்க தரப்பிலிருந்து எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் நிறைவேற்றிவிட்டோம் இலங்கைக்கு கடன் வழங்கியவர்களுடனான பேச்சுவார்த்தைகள் இழுபறியாவதால் இந்த தாமதம் ஏற்படுகிறது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் மூன்று சுற்று பேச்சுவார்தைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் அவர்கள் மேலும் சில தெளிவுபடுத்தல்களை கோரியுள்ளனர், நாங்கள் நிச்சயமாக கடன்வழங்குநர்களின் அங்கீகாரத்தை பெறுவோம் ஆனால் எப்போது என்பது தெரியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.