நத்தார் தினத்தையொட்டி தேவாலயங்களுக்கு விஷேட பாதுகாப்பு

எதிர்வரும் நத்தார் தினத்தை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விஷேடட பாதுகாப்பு வழங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேவாலயங்களுக்குள் பிரவேசிக்கும் இனந்தெரியாத நபர்களை அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் நாடெங்கும் விசேட பாதுகாப்பு மற்றும் பல்வேறு வேலைத்திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

நத்தார் பண்டிகைக்காக நாட்டின் பல பகுதிகளில் ஏற்கனவே பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்