சீனாவிடம்பணம் கேட்கும் கிழக்கு மாகாண ஆளுநர்

இலவச அரிசியை வழங்குவதற்குப் பதிலாக, எதிர்வரும் பெரும்போகம் மற்றும் முந்திய பருவத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை, நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்குமாறு சீன அரசாங்கத்திடம் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் அண்மையில் கேட்டுக் கொண்டார்.

அதன் மூலம் விவசாயிகளின் நெல்லுக்கு நியாயமான விலை கிடைப்பதுடன் நுகர்வோரும் அரிசியை நியாயமான விலையில் வாங்க முடியும். மேலும், இதன் மூலம் அரிசி கொள்முதல் செய்வதற்கு அரிசி சந்தைப்படுத்தல் சபைக்கு அரசு நிதி ஒதுக்குவதில் உள்ள சிரமம் நீங்கும் என்றும் ஆளுநர் கூறினார்.

சீனாவின் யுன்ஹான் மாகாண மக்கள் சங்கத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு சூரிய ஒளி விளக்குகளை வழங்கியமைக்கு தனது விசேட நன்றிகளைத் தெரிவித்த ஆளுநர், விவசாய அபிவிருத்திக்கான மேற்படி முன்மொழிவுக்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

விவசாய அமைச்சின் அறிக்கையின்படி எதிர்வரும் பெரும்போகத்தில் 609,000 மெற்றிக் தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக விவசாயிகளின் நெற்பயிர்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால் அது விவசாயிகளுக்கு மேலும் உதவிகரமாக அமையும் எனவும் ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மாகாணத்தின் சுத்தமான குடிநீர் தேவைக்கு ஆதரவை வழங்குமாறு சீன தூதுக்குழுவிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.