மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் யாழ் சிறைச்சாலைக்கும் பெருமை சேர்த்த வீரர்களை வரவேற்கும் நிகழ்வு யாழ் சிறைச்சாலையில் இடம்பெற்றது.

அரச திணைக்களங்களுக்கு இடையிலான மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பங்குபற்றி சிறைச்சாலை திணைக்களத்திற்காக அதிக பதக்கங்களை பெற்று திணைக்களத்தையே பெருமைபெற வைத்த எமது யாழ் சிறைச்சாலையின் வீரர்களான C. Q யூட் பீரிஸ் உயரம் பாய்தல் போட்டியில் 2ம்இடம் வெள்ளி பதக்கத்தையும் T. C அன்ரு குண்டு போடுதல் போட்டியில் 2ம்இடம் வெள்ளி பதக்கத்தையும் பரிதி வட்டம் (தட்டெறிதல்) வீசுதல் 3ம் இடம் வெண்கல பதக்கத்தையும் S. சியானியஸ் ஈட்டி எறிதல் போட்டியில் 1ம் இடம் தங்க பதக்கத்தையும் H. J அபேயரத்தன 110M தடை தாண்டல் போட்டியில் 3ம் இடம் வெண்கல பதக்கத்தையும் J. றொகான் 4* 400M அஞ்சல் ஓட்டம் 3ம் இடம் வெண்கல பதக்கமும் 4*100 3ம் இடம் வெண்கல பதக்கத்தையும் மொத்தமாக 7 பதக்கங்களை பெற்று இலங்கை சிறைச்சாலைக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கும் பெருமையை தேடிதந்துள்ளார். இவர்களை வரவேற்கும் நிகழ்வு 2022.12.22 இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகத்தர்களால் நடைபெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.