மருந்துகள் தட்டுப்பாடு -சத்திர சிகிச்சைகளை மட்டுப்படுத்த உத்தரவு

நாடு முழுவதிலும் உள்ள முக்கியமான மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக, தினசரி செய்ய திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறான சத்திரசிகிச்சைகளை மட்டுப்படுத்த அல்லது ஒத்திவைக்குமாறு விசேட வைத்தியர்களுக்கு அறிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்துகள் தட்டுப்பாடு -சத்திர சிகிச்சைகளை மட்டுப்படுத்த உத்தரவு | Orders To Limit Surgical Treatments

 

வலிநிவாரணிகள், தொற்று நோய்களுக்கான எளிய மருந்துகள் முதல் உயிர்காக்கும் மருந்துகள் வரை பிரதான வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகள் தட்டுப்பாடு நிலவுவதாக சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

பொதுவாக, பெரிய மருத்துவமனைகளில் ஒரு மாதத்திற்கு போதுமான மருந்து இருப்பு இருக்க வேண்டும், ஆனால் சில மருத்துவமனைகளில் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு போதுமான மருந்துகளே உள்ளதாக தெரிவிக்கப்படு கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.