வெளிநாட்டு வருமானத்தைக் கொண்டு வருவதில் சுற்றுலாத்துறை பிரதானமாகிறது – அலி சப்ரி

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் தலைவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை பங்குதாரர்களுடனான சந்திப்பு இன்று நடைபெற்றது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் இந்த சந்திப்பு ஆரம்பமானது.

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான விளம்பரப் பிரசாரங்கள் தொடர்பில் கலந்துரையாடலில் கவனம் செலுத்தியதாக அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நாணயத்தை கொண்டு வருவதில் சுற்றுலா முக்கிய ஊக்கிகளில் ஒன்றாகும்.

எனவே கூட்டு முயற்சி மிகவும் அவசியமானது என அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்