சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 40 மில்லியன் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட 06 மோட்டார் சைக்கிள்கள் வெலிவேரிய, ஹேனகமவில் உள்ள கராஜ் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


குறித்த மோட்டார் சைக்கிள்களின் பெறுமதி 40 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், வெலிவேரிய ஹேனகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் பயன்படுத்த அனுமதிக்கப்படாத இந்த அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் பாகங்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அசெம்பிள் செய்து விற்பனைக்கு தயார்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (டிசம்பர் 22) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.