நாளாந்தம் வாகன விபத்துக்களால் 8 பேர் உயிரிழக்கின்றனர்!

நாடளாவிய ரீதியாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக 1,971 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்தின் பொது பாதுகாப்பு நிலைய கட்டளைத் தளபதி  சேனக கமகே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் வாகன விபத்துக்கள் காரணமாக குறைந்தது 8 பேர் உயிரிழப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்