கதிரேசன் கோயிலில் காணப்பட்ட 6 கோடி பெறுமதியுள்ள தங்க வைர நகைகள் வெள்ளி பூஜை பாத்திரங்கள் எங்கே- என யாழ் மாநகர சபை உறுப்பினர் தனேந்திரன் கேள்வி!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள கதிரேசன் கோயிலில் காணப்பட்ட 6 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியுள்ள தங்க வைர நகைகள் வெள்ளி பூஜை பாத்திரங்கள் எங்கே என கேள்வியெழுப்பிய யாழ் மாநகர சபை உறுப்பினர் தனேந்திரன்,
25 வருடங்களாக பொது கூட்டம்
கூட்டாமல் ஆலயத்தை வைத்திருப்பதன் பின்னணி தொடர்பாகவும் சந்தேகம் வெளியிட்டார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்து வியாபாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்த நாட்டுக்கோட்டை செட்டிமார்
தங்களிடையே வரி வசூலித்து யாழ்நகரில் காங்கேசன்துறை வீதியில் கதிரேசன் கோயில்
எனும் முருகன் கோயிலை வியக்கத்தக்க சிற்ப வேலைப்பாடுகளுடன் கருங்கல்லால் கட்டி1931 ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்து அந்த கோயிலை தொடர்ந்தும் நிர்வகித்தும் வந்தனர்.

40 வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாணம் கதிரேசன் கோயிலை நிர்வகித்து வந்த நாட்டுக்கோட்டை
செட்டிமார் அந்த காலப்பகுதியில் அப்போதைய பெறுமதியில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட அதாவது தற்போதைய பெறுமதியில் 6 கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட தங்க வைர நகைகள், வைரம் பதித்த தங்கவேலாயுதம்,ரத்தினம் பதித்த வலம்புரி சங்கு, பழைய காலத்து சொக்கத்தங்கத்திலான நகைகள், தங்க கட்டி, முருகனுக்குரிய வெள்ளி அங்கிகள், வெள்ளி விளக்ககளி, வெள்ளி செம்புகள் உட்பட வெள்ளி பூஜை பாத்திரங்கள், வெள்ளி மயில் வாகனம் என அனைத்தையும் முருகனுக்கு என தேடி வைத்தார்கள்.
அந்த காலத்தில் முருகன் தங்க வைர நகைகள் வெள்ளி கவசங்கள் அணித்தவாறு வைரம் பதித்த வேலுடன் வெள்ளி மயில் வாகனத்தில் வீதிஉலா வருவார்.
ஆலயத்தின் மடப்பள்ளியில் இருந்து முருகனுக்கு நைவேத்தியம் வைத்து காலை மதியம் மாலை என மூன்று
நேர பூஜைகளை சிறப்பாக நடத்திவந்தனர்.

நாட்டுக்கோட்டை செட்டிமார் கொழும்பு அரசியலில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு இந்தியாவுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு
ஏற்பட்டது. அதனால் கதிரேசன் கோயில் பின்பக்கதில் இருந்த இரும்பு பெட்டகத்தில் தங்க வைர நகைகள் வெள்ளி அங்கிகள் வெள்ளி பூஜை பாத்திரங்கள் உட்பட அனைத்தையும் வைத்து பெட்டகத்தையும் கோயிலையும் பூட்டிவிட்டு இந்தியாவுக்கு சென்றுவிட்டார்கள்.

சில வருடங்களாக கோயில் பூட்டப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் ஊடாக 6 பேர் கொண்ட அறங்காவலர் குழு
கதிரேசன் கோயிலை பெறுப்பேற்று கதிரேசன் கோயிலை திறந்தனர்.
யாழ்மாவட்ட நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழுவில் உள்ள 6 பேரும் இறந்து விட்டார்கள். ஆறாவது நபர் சென்ற வருடம் 2021 பிற்பகுதியில் இறந்துவிட்டார்.

1995ம் ஆண்டு இடப்பொயர்வுக்கு பிற்பாடு நிர்வாக சபை இல்லாமல் ஆலயம் இயங்கிக்கொண்டு இருக்கிறது. கடந்த 25 வருடங்களாக இங்கு நிர்வாகசபையும் இல்லை. நிர்வாக சபை கூட்டங்களும் நடைபெறுவதில்லை. 2022ம் ஆண்டு
தேவஸ்தானத்தில் இருந்து வெளிவரும் கந்தசஷ்டி துண்டுப்பிரசுரத்தில் தேவஸ்தான அறங்காவலர் என
வெளியிடப்பட்டிருக்கிறது. எனவே கதிரேசன் ஆலயத்தில் நிர்வாகசபை இல்லை என்பதை இது
உறுதிப்படுத்தியிருக்கிறது.

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றினால் வழங்கப்பட்ட ஆலயம் தனி ஓருவரின்
கட்டுப்பாட்டில் இருக்கிறதா? யார் இந்த அறங்காவலர்? ஆலயம் விதிமுறைக்கு மாறாக இயங்கிகொண்டிருக்கிறது.
உதய பூஜை செய்யாமல் காலை 6 மணிக்கு ஆலயம் திறந்து விடப்படுகிறது. காலை 9 மணிமுதல் மாலை 5.30 மணிவரை ஆலயம் தொடர்ச்சியாக 8 மணித்தியாலம்
பூட்டப்பட்டிருக்கிறது. மதியம் நைவேத்தியம் மற்றும் பூஜை பல வருடங்களாக நடப்பதில்லை.
ஆலயத்தை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.
சிவன்கோவிலடி சாப்பட்டுக்கடை மோதகம், கேசரி மற்றும் பூந்தி போன்றவற்றை நைவேத்தியமாக
முருகனுக்கு படைக்கிறார்கள்.
கந்தசஷ்டி திருவிழாவுக்கு மடப்பள்ளிக்கு ஜயரை நியமிக்காமல் லாபத்தை எதிர்பார்த்து 55 ரூபாவீதம்
மேதகம் வடை வெளியில் இருந்து வாங்கி திருவிழா நடத்தியிருக்கிறார்கள்.
அடியவர்களுக்கு இராப்போசனமாக இட்லி,தோசை,சட்ணி,சாம்பாறு நூடில்ஸ், கொடுத்து தவறாக
வழிநடத்துகின்றார்கள்.

யாழப்பாண பிரதேச செயலாலருக்கு கடந்த வைகாசி மாதம் கோவில் சம்பந்தமான சகல பிரச்சனைகளும்
எடுத்துக்கூறிய போது தனக்கு 3 மாதகால அவகாசம் தருமாறும் தான் சகல பிரச்சனைகளை சரி செய்து
ஆலயத்தை நிமிர்த்தி ஒரு சரியான ஒழுங்குக்கு கொண்டுவந்ததன் பின் ஒரு பொது கூட்டத்தை கூட்டுவதற்கு
ஒழுங்கு செய்வதாகவும் தெரிவித்தார்.ஆனால் தற்போது 6 மாதம் கடந்து விட்டது எதுவும் நடைபெறவில்லை.
ஆலயம் தொடர்ந்தும் மதிய பூஜை நைவேத்தியம் கூட இல்லாமல் ஆகம விதிமுறைக்கு மாறாக தான்
இயங்கிக்கொண்டிருக்கிறது. அதுமட்டும் அல்லாது திருவிழா என்னும் பெயரில் வியாபாரம் தொடர்கதையாக
நடந்துகொண்டிருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (16-12-2022) இராப்போசனம் இட்லி சட்ணியுடன் புதிதாக ஒரு
திருவிழாவை நடத்தியிருக்கிறார்கள். இது நாட்டுக்கோட்டை செட்டிமாரால் முருகனுக்காக கட்டப்பட்ட தனிபட்ட பிரசித்தி பெற்ற ஆலயம். ஒருசில வருடங்களாக இங்கு இராப்போசனம் கொடுத்து திருவிழாவுக்கு அடியவர்களை அழைக்கும் இந்த நடவடிக்கைகளை பலரும் கண்டிக்கிறார்கள். அடியவர்களை
குறிப்பாக சிறுவர்களை தவறாக வழிநடத்துவதாக பலரும் விசனம் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக உரிய தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.