சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவிட்டு கப்பம் பெற்ற சிறுவர்கள் பொலிசாரல் கைது -சம்மாந்துறையில் சம்பவம்

சம்மாந்துறை பிரதேசத்தில் முகப்புத்தகம் மூலம் நபர்களை நடத்தை கெட்டவர்கள் ,போதை பொருள் பாவனை மற்றும் விற்பனை செய்பவர்கள் என்று தவறான செய்திகளை பதிவு செய்து விட்டு பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு தங்களது தொழில் நுட்பத்தால் நீக்கி தருவதாக கூறி ஏமாற் பணம் பெற்று வந்த இரண்டு நபர்களை சமாந்துறை பலவித முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் பரிசோதகர் எம்.எச்.எம் ஹசிப் அவர்களின் தலைமையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சம்மாந்துறையைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு நபர்களை (23/12/2022) இன்று சம்மாந்துறை நீதிமன்றில் ஆஜர் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுள்ளது என சமாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.