நெல் அறுவடைக்கு இலவச எரிபொருள் !

இந்த பருவத்தில் நெல் அறுவடைக்கு தேவையான எரிபொருளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அறுவடை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல்கள் உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் இருந்து மானியமாக பெறப்பட்ட இந்த எரிபொருள் இருப்பு விவசாயிகளுக்கு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஒரு ஹெக்டேருக்கு 20 லீற்றர் எரிபொருளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், நிலத்தை தயார்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இந்த எரிபொருள் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.