சில்வர் ஸ்பிரிட் சொகுசுக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது..

சில்வர் ஸ்பிரிட் எனும் பயணிகள் சொகுசுக் கப்பல் நேற்று (23) கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.


குறித்த கப்பலானது எதிர்வரும் செப்டெம்பர் 26 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை நோக்கிப் பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 648 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்தக் கப்பலில் பயணிக்கும் பயணிகள் கொழும்பு நகரம், களனி விகாரை உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு இந்தக் காலப்பகுதியில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Aitken Spence இன் ஒருங்கிணைப்பின் கீழ் 2022 இல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்படும் நான்காவது பயணக் கப்பல் சில்வர் ஸ்பிரிட் ஆகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.