விளையாட்டு பொருட்களுக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 100 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சிறுவர் விளையாட்டு பொருட்களுக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 100 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களை இலங்கை சுங்கம், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (PNB) இணைந்து கைப்பற்றப்பற்றியுள்ளன.
அதன்படி, கடந்த சில வாரங்களாக யாரும் கோராத பல பார்சல்களை இலங்கை சுங்கம், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (PNB) இணைந்து தபால் திணைக்களத்தில் பணிபுரிபவர்கள் முன்னிலையில் ஆய்வு செய்த போதே மேட்படி போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன .

  

ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட சிறுவர் விளையாட்டுப் பொருட்களுக்குள் 4,673 கிராம் ‘குஷ்’ (கஞ்சா) மற்றும் 9,586 எக்ஸ்டஸி மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த போதைப்பொருட்களின் மதிப்பு ரூ. 95,860,000. என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.