டிச. 01-20 திகதிக்குள் 50,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை

டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களுக்கு இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000 ஐத் தாண்டியுள்ளது, இது சுற்றுலா நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

டிசம்பர் 01 முதல் 20 வரையான காலப்பகுதியில், மொத்தமாக 50,375 சர்வதேச பார்வையாளர்கள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, தினசரி வருகை சராசரியாக 2,518 ஐ அதிகம் . முந்தைய மாதங்களில், தினசரி வருகை சராசரியாக 2,200க்கு குறைவாகவே இருந்தது.

முதல் வாரத்தில் (டிசம்பர் 01-07) சுற்றுலாப் பயணிகளின் வருகை 16,169 ஆகவும், இரண்டாவது வாரத்தில் (டிசம்பர் 08-14) 16,418 ஆகவும் இருந்தது. மூன்றாவது வாரத்தின் முதல் ஐந்து நாட்களில் (டிசம்பர் 15-20) சுற்றுலாப் பயணிகளின் வருகை 17,788ஐ எட்டியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையின் தற்போதைய வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தால், டிசம்பர் மாதத்தில் சுமார் 75,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் இவ்வருட இலக்கை எட்ட முடியும், அதாவது நாட்டில் அதிகரித்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு முன்னர் இருந்ததைவிட சுற்றுலாத் துறை ஓரளவு மேம்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.