டிச.26ஆம் திகதி கடவுசீட்டு பெற விண்ணப்பித்தவர்களுக்கு விசேட அறிவித்தல்

கடவுசீட்டு பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை 26ஆம் திகதிக்கு நேரம் வழங்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் அந்த வாரத்தில் எஞ்சிய 04 தினங்களில் ஒரு தினம் மற்றும் நேரம் வழங்கப்படுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள நிர்வாக ஆணையாளர் ஹர்ஷ அலுக்பிடிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளதால், அத்தினத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயம் மூடப்படுகின்றது.

அதன் காரணமாக கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக காரியாலயத்துக்கு வருமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரிகளுக்கு, வேறு தினம் ஒன்று வழங்கப்படும். புதிய திகதி மற்றும் நேரம் விண்ணப்பதாரிகளுக்கு குறுஞ்செய்தி ஊடாக அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.