பெற்ற தாயை இலங்கையில் தேடும் பிரான்ஸ் யுவதி

பிரான்ஸ் நாட்டில் ரோசி என்ற யுவதி இலங்கையில் தன்னை பெற்றெடுத்த தாயை தேடி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வளர்ப்பு பிள்ளையாக தத்தெடுக்கப்பட்ட ரோசி கடந்த 1991 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பெற்ற தாயை இலங்கையில் தேடும் பிரான்ஸ் யுவதி | Woman France Looking For Her Mother In Sri Lanka

 

இந்த இலங்கையில் தன்னை பெற்ற தாயை கண்டுபிடிக்க உதவுமாறு ரோசி கோரிக்கை விடுத்துள்ளார். திருணம் செய்துக்கொண்டுள்ள ரோசி இரண்டு முறை இலங்கைக்கு வந்து தனது தாயை கண்டுபிடிக்க முயற்சித்த போதிலும் அது கைக்கூடவில்லை.

அவரிடம் உள்ள தகவல்களுக்கு அமைய ரோசி கடந்த 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி கொழும்பு சொய்சா வைத்தியசாலையில் பிறந்துள்ளார்.

இரண்டு தாய்மாரின் பெயர்கள் அப்போதைய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அவர் தாயை கண்டுபிடிப்பதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்.

கொழம்ப பீட்டர் ஹேவகே பிரியந்தி ரோணுகா மற்றும் வந்துரம்ப திலகாவதி ஆகியோரின் பெயர்கள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இது சம்பந்தமாக ஏதேனும் தகவல்கள் அறிந்தவர்கள் அது குறித்து 0772114794 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு அறிய தருமாறு ரோசி கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.