கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது….

கடும் மழை காரணமாக கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரிமத்தலாவ மற்றும் பேராதனை புகையிரத நிலையங்களுக்கு இடையிலும் நானுஓயா புகையிரத கடவைக்கு அருகிலும் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளமையினால், மலையக புகையிரத சேவை தடைப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று காலை 10.15 மணிக்கு பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் புகையிரதங்களும், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து நண்பகல் 12.40 மணிக்கு நானுஓயா வரையான புகையிரதங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு, ஊவா, மத்திய, சப்ரகமுவ, மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் கனத்த மழை பெய்யும் எனவும் சில பிரதேசங்களில் 150mm மழை வீழ்ச்சிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.