5 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்!

நிலவும் பலத்த மழை காரணமாக 5 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

கண்டி, குருநாகல், மாத்தளை, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு நாளை காலை 8.30 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் தேவைப்பட்டால் பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயர தயாராக இருக்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் கோரியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.