யாழ் குடாநாட்டு மக்களுக்கு எச்சரிக்கை தகவல்!

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொவிட் தொற்றுக் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து காணப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு வருடங்களிலும் மிகக் குறைந்தளவு டெங்கு நோயாளர்களே இனங்கப்பட்டிருந்தார்கள்.

யாழ் குடாநாட்டு மக்களுக்கு எச்சரிக்கை தகவல் | Increase In Dengue In Jaffna District

 

ஆனால் இந்த வருடத்தில் இன்று வரையான காலப்பகுதியிலே யாழ். மாவட்டத்திலே 3294 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இதுவரை 9 மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வருடத்தின் ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒப்பிட்டு பார்க்கும்போது நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

ஒக்டோபர் மாதத்தில் யாழ். மாவட்டத்தில் 237 நோயாளர்களும், நவம்பர் மாதத்தில் 367 நோயாளர்களும், டிசம்பர் மாதத்தில் 570 நோயாளர்களும் டெங்கு நோயுடன் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக கடந்த இரண்டு வார காலப் பகுதியிலே சடுதியான அதிகரிப்பை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

கடந்த பல வருடங்களிலே சில வருடங்களில் டெங்கு நோய்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் இறப்புக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.

ஆனால் இந்த வருடத்தில் இதுவரை 9 இறப்புகள் காணப்படுவது மிகக் கூடிய ஒரு அதிகரிப்பாகும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.