வேலைவாய்ப்பு மோசடி – டுபாய் சுத்தா கைது!

டுபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஸ்ஸங்க பிரியதர்ஷன கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வேலை தேடுபவர்களை செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.