அநுராதபுரத்துக்கும் வவுனியாவுக்கும் இடையில் 5 மாதங்களுக்கு ரயில் சேவைகள் இடம்பெறாது

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் 5 மாத காலத்துக்கு அநுராதபுரத்துக்கும் வவுனியாவுக்கும் இடையில் புகையிரத சேவைகள் இடம்பெறாது என போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


இன்று (28) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றின் காரணமாகவே இந்தப் புகையிரத போக்குவரத்து நிறுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

ரயிலில் வரும் பயணிகளை அநுராதபுரத்துக்கு ஸ்ரீலங்கம பேரூந்துகள் மூலம் ஏற்றிச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கு ரயில்வேயின் நவீனமயமாக்கல் பணிகளின் பின்னர், ஆசன முன்பதிவு நேரம் திருத்தப்படும் என ரயில்வேயின் பதில் பொது முகாமையாளர் எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.