அனைத்து நெல் விவசாயிகளுக்கும் USAID மூலம் 2023 இல் இலவச TSP உரம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரமைப்பின் (USAID) நிதியுதவியுடன், இலங்கையிலுள்ள அனைத்து நெல் விவசாயிகளுக்கும் 36,000 மெட்ரிக் தொன் டிரிபிள் சூப்பர் பொஸ்பேட் (TSP) உரத்தை அமைச்சின் ஊடாக விவசாய அமைச்சு விநியோகிக்கவுள்ளது.

2022/2023 பெரும் போகத்தில் ஒரு விவசாயிக்கு வழங்கப்படும் TSPயின் அளவு அவர்கள் சாகுபடி செய்த பரப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

ஒரு விவசாயிக்கு ஒதுக்கப்படும் TSP உரத்தின் அளவை நிர்ணயம் செய்வதற்காக இந்த பெரும் போகத்தில் பயிரிடப்பட்ட நிலப்பரப்புடன் விநியோக பட்டியல் வெளியிடப்பட்டு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அனைத்து கமநல சேவை நிலையங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தகுதியுள்ள அனைத்து நெல் விவசாயிகளையும் அந்தந்த விவசாய சேவை மையத்திற்குச் சென்று அவர்களின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யுமாறு FAO அழைப்பு விடுத்துள்ளது.

விநியோகப் பட்டியல்கள் 2023 ஜனவரி 5 வரை காட்சிப்படுத்தப்படும், மேலும் உர விநியோக திகதி கமநல சேவை மையங்கள் மூலம் பகிரப்படவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.