உருளைக்கிழங்கு, காய்கறி, தேயிலை தோட்டங்களுக்கு இரண்டு வாரங்களில் விசேட உரங்கள்

உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை மற்றும் தேயிலைத் தோட்டங்களுக்கு இரண்டு வகையான விசேட உரங்களை ஒரு வாரத்திற்குள் உற்பத்தி செய்யுமாறு இலங்கை உரக் கம்பனி மற்றும் கொழும்பு கொமர்ஷல் உர லிமிட்டெட் நிறுவனத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, உருளைக்கிழங்கு மற்றும் மரக்கறி பயிர்ச்செய்கைக்கான விசேட உர உற்பத்தி இலங்கை உர நிறுவனத்திடமும், தேயிலை பயிர்ச்செய்கைக்கான விசேட உர உற்பத்தியானது Commercial Fertilizer Ltd நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

இரண்டு வகையான உரங்களை உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவிடம் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

உர உற்பத்திக்குத் தேவையான யூரியா, எம்ஓபி மற்றும் இதர மூலப்பொருள்கள் நிறுவனங்கள் கையிருப்பில் இருப்பதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

வத்தளையில் உள்ள அரசுக்கு சொந்தமான சிலோன் உர நிறுவனம் மற்றும் கொமர்ஷல் பெர்டிலைசர் லிமிடெட் ஆகியவற்றின் களஞ்சியசாலை வளாகத்தில் நேற்று கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கிடையில், விவசாய தேவைகளுக்கு தேவையான 80% உரங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது யூரியா விநியோகம் இடம்பெற்று வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.