மகஜன சம்பத லொத்தர் சீட்டிழுப்பில் 20 இலட்சம் ரூபாவை வெற்றிகொண்ட புதுக்குடியிருப்பு வாசி

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேசிய லொத்தர்சபையினால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் ஊடாக லொத்தர்சீட்டுக்கள் விற்பனையாகி வருகின்றன.


புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள லொத்தர் விற்பனை முகவரிடம் நாளாந்தம் லொத்தர் சீட்டுகளை வாங்கிவரும் வாடிக்கையாளர் ஒருவருக்கு அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் இருபது இலட்சம் ரூபா விழுந்துள்ளது.

கடந்த 23.12.2022 திகதிக்கான மகஜன சம்பத லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் இந்தப் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

புதுக்குடியிருப்பு திம்பிலி பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கே இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

அண்மையில் யாழ். சங்கானை வாசி ஒருவர் மகஜன லொத்தர் சீட்டிழுப்பில் 1 கோடியே 97 லட்சம் ரூபாவை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.