யாழில் 75 வது சுதந்திர தின நிகழ்வு; ஜனாதிபதி ரணில் பங்கேற்பார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின  கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

  75 ஆவது சுதந்திர தின நிகழ்வு தொடர்பில்   ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.  குறிப்பாக  பெப்ரவரி நான்காம்  திகதி கொழும்பில் சுதந்திரதின  கொண்டாட்டம்  இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர்  பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள  கலாசார மத்திய நிலையத்தில்  சுதந்திர விழா நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. குறித்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் கலந்து கொள்வதற்கு ஏற்ற வாறாக  நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன   அதற்கான ஆரம்ப கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது  .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.