தற்போதைய நிலக்கரி கையிருப்பு நுரைச்சோலையின் இரண்டு மின்பிறப்பாக்கிகளையும் ஜனவரி 8 வரை இயக்க போதுமானது

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்களை ஜனவரி 8 ஆம் திகதி வரை இயக்குவதற்கு தற்போதுள்ள நிலக்கரி கையிருப்பு போதுமானது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் றொஹான் செனவிரத்ன, தற்போது நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்கள் இருப்புக்களை வைத்து இயங்கி வருவதாக தெரிவித்தார்.

புதிய இருப்புக்கள் கிடைத்தவுடன், மூன்று மின்பிறப்பாக்கிகளும் செயற்படத் தொடங்கும் என்றார்.

ஆறு நிலக்கரி ஏற்றுமதி ஜனவரியிலும் ஏழாவது பெப்ரவரி முதலாம் திகதியும் வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.