அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவு

அனைத்து அரசு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுமுறை அலவன்ஸ்களை வழங்கலாம் என்று திறைசேரியின் செயலர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அனைத்து அமைச்சுகள், அரசு கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு சிறப்பு சுற்றறிக்கை மூலம் திறைசேரியின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

மேற்கூறிய சுற்றறிக்கையில் கூறப்பட்ட பொது நிறுவனம் மூலதனம் மற்றும்/அல்லது தொடர் செலவினங்களுக்காக திறைசேரியி லிருந்து நிதியைப் பெறக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.