நான்கு இந்திய மீனவர்கள் பருத்தித்துறையில் கைது!

யாழ்.பருத்தத்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நான்கு இந்திய மீனவர்களையும், அவர்கள் பயணித்த ஒரு நாட்டுப் படகையும் பிடித்து பருத்தித்துறை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (29) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் நாட்டுப்புறப் படகொன்றில் பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி உள் நுழைந்து மீனவர்களின் வலைகளை அறுத்து நாசம் செய்ததோடு, மீன்களையும் அபகரிக்க முயன்றுள்ளனர்.

இதனை அவதானித்த பருத்தித்துறை மீனவர்கள் அவர்களைப் பிடித்து கரைக்கு கொண்டுவந்து பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.