பௌத்த, பாலி பல்கலைக்கழகம் இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் திறக்கப்படும்

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் ஓரிரு வாரங்களில் பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படுமென எதிர்பார்ப்பதாக பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் இம்மாதம் 19ஆம் திகதி காலவரையின்றி மூடப்பட்டது.

பகிடிவதை மற்றும் பல சம்பவங்களால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.

இதேவேளை, அனைத்து மகாநாயக்க தேரர்களுடனும் கலந்துரையாடிய பின்னரே பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.