மேலும் 1 மில்லியன் கொள்கலன்களை கையாளும் வகையில் ஜெயா கொள்கலன் முனையம் விரிவாக்கப்படுகிறது

தற்போதைய விரிவாக்கத் திட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஜெயா கொள்கலன் முனையத்தில் மேலும் 1 மில்லியன் கொள்கலன்களைக் கையாள முடியும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜெயா கொள்கலன் முனையம் 1,380 மீற்றர் நீளத்திற்கு விரிவுபடுத்தப்படும். இந்த விரிவாக்கம் 360 மீற்ற ர் நீளமுள்ள இரண்டு கப்பல்களை ஒரே நேரத்தில் நிறுத்த அனுமதிக்கும்.

1,260 மீற்ற ர் நீளமுள்ள ஜெயா கொள்கலன் முனையம் சுமார் 2 மில்லியன் கொள்கலன்களைக் கையாளுகிறது.

கிழக்கு கொள்கலன் முனையம் மற்றும் ஜெயா கொள்கலன் முனையத்தின் நிறைவைத் தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் தெற்காசியாவின் தனித்துவமான துறைமுகமாக கொழும்பு துறைமுகம் அமையும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்த துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஜெயா கொள்கலன் முனையத்தின் விரிவாக்கத் திட்டத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விஸ்தரிப்பு திட்டத்திற்கு இலங்கை துறைமுக அதிகார சபையின் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.