சாவகச்சேரி இந்து கல்லூரிக்கு சீன பதில் தூதர் விஜயம்!

வட பகுதிக்கு வருகை தந்துள்ள சீன பதில் தூதுவர் ஹூ வோய், தலைமையிலான குழுவினர் யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரிக்கான உதவித்திட்டங்களை வழங்கி வைத்தனர்.

பாடசாலைக்கு இன்று(29) காலையில் வருகை தந்த சீன பதில் தூதுவர் தலைமையிலான குழுவினர் “பாண்ட் வாத்திய” இசையோடு வரவேற்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

இதன் போது 40 இலட்சம் ரூபா பெறுமதியான மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் சிமாட் வகுப்பறைக்கான உபகரணங்கள் ஆகியவறலறை சீன பதில் தூதுவர் பாடசாலைச் சமுகத்திடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் சீன தூதர அதிகாரிகள், தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் சு.கிருபாகரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.