14ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தி விவசாயம் செய்யத் தீர்மானம்

14,000 ஏக்கர் தரிசு வயல் நிலங்களை கையகப்படுத்தி அடுத்த ஆண்டு விவசாயம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.


அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அபிவிருத்தி திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, மாத்தளை, நுவரெலியா, வவுனியா, குருநாகல், மன்னார், புத்தளம், பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் ஐந்து வருடங்களாக பயிர் செய்யப்படாத 2774 ஏக்கர் வயல் நிலங்கள் உட்பட 14,000 ஏக்கரை அரசாங்கம் கையகப்படுத்தி பயிரிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.