மது போதையில் குழப்பம் விளைவித்த காவல்துறை உத்தியோகஸ்தர் கைது..

கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியின் போது போதையில் மேடையில் ஏறி தவறாக நடந்துக்கொண்ட காவல்துறை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேடையில் ஏறி குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்துக்கொண்ட காவல்துறை உத்தியோகஸ்தரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மேற்கொண்ட முயற்சியின் போது காவல்துறை உத்தியோகஸ்தரின் பற்கள் மற்றும் உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை உத்தியோகஸ்தரின் உதடு வெடித்துள்ளதால், இரண்டு தையல்களை போட நேரிட்டுள்ளது என கோட்டை காவல்துறை தெரிவித்துள்ளனர்.

மது போதையில் குழப்பம் விளைவித்த காவல்துறை உத்தியோகஸ்தர் - கொழும்பில் சம்பவம் | Police Officer Arrested In Galle Face

கைது செய்யப்பட்டுள்ள காவல்துறை உத்தியோகஸ்தர் பொரலந்த காவல்துறை பயிற்சி கல்லூரியில் கடமையாற்றி வந்த நிலை சிறப்பு பாதுகாப்பு பணிக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

இச் சம்பவம் குறித்து காவல்துறை உத்தியோகஸ்தர் சம்பந்தமாக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், காவல்துறை உத்தியோகஸ்தர் நேற்று கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.