தாய் தகப்பன் தாக்கப்பட்டு முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட பெண் – கிளிநொச்சியில் சம்பவம்!

22 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் கிளிநொச்சி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட உதய நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஆறு பேர் கொண்ட குழுவினர் குறித்த பெண்ணை முச்சக்கர வண்டியில் கடத்தியுள்ளனர்.

 

தாய் தகப்பன் தாக்கப்பட்டு முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட பெண் - கிளிநொச்சியில் சம்பவம்! | Kidnapped Woman By Three Wheeler In Kilinochi

கடத்தப்பட்ட பெண் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வசித்து வருவதோடு, அவர் நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

குறித்த நபர் போதைக்கு அடிமையானவர் என்பதால் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குறித்த பெண்ணின் காதலன் ஆறு பேர் கொண்ட குழுவுடன் பெண்ணின் வீட்டினுள் நுழைந்து பெண்ணின் தாய், தகப்பன் மற்றும் தம்பி ஆகியோரைத் தாக்கிவிட்டு முச்சக்கர வண்டியில் பெண்ணைக் கடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதையடுத்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.