சிறுமி பாலியல் வன்புணர்வு – பிக்கு மற்றும் அவரது சகோதரர் உட்பட நால்வர் கைது!

11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பிக்கு ஒருவரும், அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துக்கு உதவிய குற்றத்திற்காக சிறுமியின் அத்தை மற்றும் பாட்டி ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மொனராகலை, தொம்பஹாவெல காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட லியன்கொல்ல பிரதேசத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கந்தானை பிரதேச பாடசாலையில் கல்விகற்கும் குறித்த சிறுமி, பாடசாலை விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்தநிலையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

விஹாரையில் பிக்குவும், சிறுமியின் அத்தையின் வீட்டில் பிக்குவின் சகோதரனும் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் சிறுமி உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, கந்தானை காவல்துறையினருக்கு அளித்த முறைப்பாட்டிற்கு அமைய காவல்துறையினர் இவர்கள் நால்வரையும் கைது செய்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.