முதலை தாக்குதலில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

கரடியனாறு பொலிஸ் பிரிவு, ஆவெட்டியாவெளியில் வயல் வேலைக்காக சென்றிருந்த குடும்பஸ்தர் ஒருவர் 26/12 அன்று மாலை வேளை வண்ணாத்தி ஆற்றைகடந்து செல்லும்போது, முதலையின் தாக்குதலுக்குள்ளாகி காணாமல் போயுள்ளார்.

தன்னை முதலை பிடித்துவிட்டதாகவும், என்னை காப்பாற்றுங்கள் என்ற அழுகுரல் கேட்டு ஆற்றின் மறுமுனையிலிருந்த செல்லையா துரைராசா(58) என்பவர் முயற்சித்தும் நீரோட்டம் வேகமாகயிருந்ததால் முதலையின் பிடியிலிருந்து அவரை காப்பாற்ற முடியவில்லை.

உடன் கரடியனாறு பொலிசாருக்கு விடயம் தெரிவிக்கப்பட அவர்களும் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களுடன் இரு நாட்களாக தேடுதல் நடாத்தியும் கண்டுபிடிக்க முடியாததால் ,
(28/12) கடற்படையினரின் உதவியுடன் அவையவங்கள் இழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சடலம் தம்பானம்வெளியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சதாசிவம் சஸ்பாபு (33) என அவரது தாயினால் அடையாளம் காணப்பட்டார்.

கரடியானாறு பொலிசாருடன் சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர் ,விசாரணைகளை மேற்கொண்டு, சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்தார்.

குறித்த ஆற்றில் வெள்ள காலங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதை அங்குள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.