ஜனவரியில் மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு மின்சார சபைக்கு 35 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது

இலங்கை மின்சார சபை நவம்பர் மாதத்தில் 35.6 பில்லியன் ரூபாவை மொத்த வருமானமாக ஈட்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போதைய கட்டணக் கட்டமைப்பின்படி, ஒக்டோபர் மாதத்திற்கான இலங்கை மின்சார சபையின் மொத்த வருமானம் 33.6 பில்லியன் ரூபாவாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

2023 ஜனவரியில் மின் நிலையங்களை இயக்குவதற்கு கனரக எரிபொருள் எண்ணெய், நாப்தா மற்றும் டீசல் ஆகியவற்றிக்கு 35 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனவரி மாதத்திற்கான நிலக்கரி கொடுப்பனவுகளுக்கு தேவை 38.45 பில்லியன் ரூபா தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.