வாடகை வாகன சாரதி கொலை – மூவர் கைது

வாகன சாரதி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அவரது கார் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காரின் சாரதி தாக்கப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு, செய்தித்தாள் துண்டுகளை வாயில் திணித்து, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், சந்தேகநபர்கள் அவர் ஓட்டி வந்த சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேக நபர்களில் கொலையுடன் நேரடியாக தொடர்புடைய இரண்டு பிரதான சந்தேக நபர்களான முன்னாள் கடற்படை சிப்பாய் மற்றும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மற்றைய சந்தேக நபர் கொலையுண்ட நபரிடம் இருந்து 02 கையடக்கத் தொலைபேசிகளை அடகு பெற்றவர் ஆவார்.

இந்த கொலையில் நேரடியாக தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட உள்ளனர்.

மினுவாங்கொட கல்லொலுவ குறுக்கு வீதி பகுதியில் வசித்து வந்த 48 வயதுடைய அசோக பண்டார என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.