நாவிதன்வெளி பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு 04வது தடவையாக ஒத்திவைப்பு…

(சுமன்)

நாவிதன்வெளி பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை நேற்றைய தினம் (29) சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் தவிசாளர் சுகயீனம் காரணமாக வரமுடியவில்லை எனத் திடீரென அறிவிப்பு விடுத்தமையால் சபையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

நாவிதன் வெளி பிரதேசசபையின் பாதீடு கடந்த 20ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பெரும்பான்மையான  11 உறுப்பினர்களின் எதிர்ப்பின் காரணமாக தோல்வியடைந்திருந்தது. மீண்டும் பாதீட்டு சமர்ப்பிற்கான கூட்டங்கள் போடப்பட்டு மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பாதீடு சமர்ப்பிப்பு தொடர்பான விசேட அமர்வுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்;தது. பிரதேசசபை உறுப்;பினர்கள் அனைவரும் கூட்டத்திற்கு வருகை தந்த வேளையில் தவிசாளர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்திய அறிக்கையொன்று செயலாளரால் தெரிவிக்கப்பட்டதையடுத்து உறுப்பினர்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதீட்டு அமர்வு நான்காவது தடவையாகவும் ஒத்திவைக்கபபட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்தை சபையில் சமர்ப்பித்து தவிசாளரால் நிறைவேற்ற முடியாத சூழ்நிலையிலேயே அவர் இவ்வாறு ஒழித்து அநாகரிகமான செயற்பாட்டை மேற்கொள்வதாக சபை உறுப்பினர்கள் இதன்போது விசனம் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் இத்தவிசாளரின் செயற்பாடுகள் மிகவும் மந்தகதியில் இடம்பெற்றிருந்தன. மக்களுக்கான எந்தவித செயற்பாடுகளும் செய்யப்டவில்லை. இன்று நான்காவது தடவையாக சபையின் பாதீடு சமர்ப்பிக்கும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. உண்மையில் சபையின் பாதீடு என்பது இரண்டு தடவைகளில் சபையில் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எமது சபையின் தவிசாளரரால் இதனை நிறைவேற்ற முடியாது என்ற காரணத்தினால் ஒழித்து ஓடி இன்று நான்காவது முறையாகப் பாதீடு சமர்ப்பிப்பதற்கான கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டும் இன்றும் கூட தன்னால் சுகவீனம் காரணமாக வரமுடியாது என்று வைத்திய அறிக்கையொன்று அனுப்பப்ட்டிருக்கின்றது.

கடந்த காலங்களிலே இவரால் எமது பிரதேசங்களிலே பல முறைகேடுகள் நடந்ததாக 14 முறைப்பாடுகள் உள்ளுராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து வருகை தந்த உத்தியோகத்தர்கள் அது தொடர்பில் பரிசோதித்தத்தன் பேரில் அக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இவர் மக்கள் நலன்சார்ந்த செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தனிப்பட்ட ஓரிருவருக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதிலேயே குறியாக இருந்தார். இக்காரணத்தினால் நாங்கள் இவர் கடந்த 20ம் திகதி சமார்ப்பித்த பாதீட்டிற்கு 13 உறுப்பினர்களில் 11 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தோம். அதேபோல் இன்றும் 12 உறுப்;பினர்கள் எதிர்த்து வாக்களிக்க இருந்த நிலையிலே இவர் இவ்வாறு நாடகங்கள் நடாத்துவது ஏற்புடையது அல்ல. தன்னுடைய தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத ஒருவர் எவ்வாறு இவ்வாறான தலைமைத்துவப் பொறுப்புகளுக்குத்; தகுதியானவர் என்பது கேள்விக்குறியான விடயமே என்று தெரிவித்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.