தீ வைத்தது உங்கள் கை வெந்தது உங்கள் சொத்து – காவல்துறையினருக்கு எதிராக தெல்லிப்பளை கிராம சேவகர்கள் போராட்டம்!

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கிராம சேவகர்கள் இன்றையதினம் (30), கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பளை காவல்துறையினருக்கு எதிராகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

தீ வைத்தது உங்கள் கை வெந்தது உங்கள் சொத்து - காவல்துறையினருக்கு எதிராக தெல்லிப்பளை கிராம சேவகர்கள் போராட்டம்! | Thellipalai Grama Niladari Protest Against Police

ஜே/239 பிரிவு கட்டுவன் மேற்கு கிராம சேவகர் அலுவலகம் சில தினங்களுக்கு முன்னர் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

குறித்த எரிப்பு சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உத்தியோகஸ்தர்கள் “அலுவலகத்தை சேதமாக்கியோரை கைது செய்”, “சமாதான அலுவலர் சமாதான நீதிவானுக்கே இந்த நிலையா?”, “இன்று எங்களுக்கு நாளை உங்களுக்கு”, “தீ வைத்தது உங்கள் கை… வெந்தது உங்கள் சொத்து” போன்ற வசனங்களை கொண்ட பதாதைகளை ஏந்தி இருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.