மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் – ஆராய்கின்றது அரசாங்கம்

சீனாவில் புதிதாக கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து இலங்கையின் கொரோனா நிலைமை குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு எனினும் புதிய கட்டுப்பாடுகள் வழிமுறைகள் குறித்து விசேட சுற்றுநிரூபம் எதனையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.

பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் முகக்கவசங்களை அணியவேண்டும் என்ற செய்தியை தொடர்ச்சியாக தெரிவிக்க வேண்டியுள்ளது என தெரிவித்துள்ள ஹேமந்த ஹேரத் நாடாளாவிய ரீதியில் சில விடயங்களை பின்பற்றவேண்டும் ஆனால் அவை கட்டாயம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பாதிப்புகள் மற்றும் பலாபலன்கள் குறித்து ஆராய்ந்த பின்னரே புதிய நiமுறைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய நடைமுறைகளை பின்பற்றுவதா இல்லையா என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்,நாங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் சமூகம் மற்றும் அரசாங்கத்தின் மீது தாக்கத்தை செலுத்தும் என ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முன்னர் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு பலாபலன்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.