நாட்டில் கொவிட் -19 நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – உபுல் ரோஹன

தற்போது கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த வாரத்தில் 40 கொவிட்-19 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

குறிப்பாக சமீபகாலமாக நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ள நாடுகளில் இருந்து நாட்டிற்குள் பிரவேசிக்கும் நபர்களை மையமாக வைத்து கொரோனா வைரஸ் கண்டறியும் முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நாடுகள் நோய் பற்றிய எச்சரிக்கையாக சீனாவிலிருந்து வருபவர்கள் மீது கொவிட் சோதனை மற்றும் சாத்தியமான தனிமைப்படுத்தல் ஆகியவற்றை முன்னெடுக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.