தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு வைபவம்.

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் சாவகச்சேரி,மீசாலை மற்றும் நுணாவில் பொது நூலகங்களின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வுகள் 22/12 வியாழக்கிழமை பிற்பகல் சாவகச்சேரி பொன் விழா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தன.
சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நூலகங்களால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு,கலை நிகழ்வுகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.
நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள்,பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.